Aadhav Arjuna | ஆதவ் அர்ஜுனா சர்ச்சை பதிவு.. நீதிமன்றம் கொடுத்த உத்தரவு இதுதான்!
சர்ச்சைக்குரிய எக்ஸ் தள பதிவு தொடர்பான வழக்கில், பதிவு உடனடியாக நீக்கப்பட்டதாகவும், இடைப்பட்ட நேரத்தில் எந்த சம்பவங்களும் நடக்கவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதவ் அர்ஜுனா தரப்பில் வாதிடப்பட்டது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பதிவிட்டதால், வழக்கை ரத்து செய்யக்கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.