Cancer Vaccine | இந்தியாவிலே முதல்முறையாக.. கேன்சருக்கு இலவச தடுப்பூசி தமிழ்நாட்டில்..

Update: 2025-10-26 09:07 GMT

1 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவசமாக புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தீவுத்திடலில், தன்னார்வ அமைப்பு மற்றும் ரோட்டரி சார்பில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் பேசிய அவர், “ தமிழ்நாட்டில் இலவச புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தை தொடங்கினால் இந்தியா முழுவதும் இந்த திட்டம் விரிவடைய வாய்ப்பு உள்ளதாக“ கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்