Bihar Next CM | பீகார் CM பதவியேற்பு நாள் குறிப்பு - CM யார்?

Update: 2025-11-17 06:34 GMT

பீகாரில் புதிய முதலமைச்சர் பதவியேற்கும் விழா வரும் 20-ஆம் தேதி நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப் பேரவையில் பாஜக, ஐக்கிய ஜனதா தள கூட்டணி 202 இடங்களில் வென்று ஆட்சியதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியது. நடப்பு சட்டப் பேரவையின் பதவிக் காலம் வரும் 22-ஆம் தேதி முடிவடைவதால், அதற்கு முன் 20-ஆம் தேதி புதிய முதலமைச்சர் பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. நிதிஷ்குமாரை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி பாஜக பிரசாரம் செய்யாத நிலையில், மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது பாஜகவிலிருந்து ஒருவர் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்பட்டிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்