வந்தேமாதரம் பாடலை ராகுல் காந்தி அவமதித்து விட்டார் - குற்றம் சாட்டினார் அமித்ஷா

Update: 2025-12-09 13:05 GMT

மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடிய அமித்ஷா

மேற்கு வங்க தேர்தலுடன் தொடர்படுத்தி வந்தே மாதரம் பாடலின் மகிமையை சிலர் குறைத்து மதிப்பிட விரும்புகின்றனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாநிலங்களவையில் வந்தே மாதரம் பாடல் குறித்த சிறப்பு விவாதத்தை தொடங்கிவைத்து உரையாற்றிய அவர், மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்குபெறாமல் ராகுல் காந்தி, வந்தேமாதரம் பாடலை அவமதித்து விட்டதாகவும் சாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்