AIAMDK | BJP | Senkottaiyan | அதிமுக-பாஜக கூட்டணி - ஒரே வார்த்தையில் ட்விஸ்ட் வைத்த செங்கோட்டையன்
அதிமுக பாஜக கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமிதான் கூறுவார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கொடிவேரி பகுதியில் நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் கிளம்பிய நிலையில், பின்னர் கூட்டணி பற்றி பொதுச் செயலளார் எடப்பாடி பழனிசாமிதான் கூறுவார் என தெரிவித்தார்