வந்தவாசி அருகே அரசுத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9.5 லட்சம் பெற்று மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
வந்தவாசி, தேசூர் பகுதியைச் சேர்ந்த சக்ரவர்த்தி, என்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு நண்பர் மூலம் அறிமுகமான அஞ்சுகம் என்பவர், அரசுத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி சக்ரவர்த்தியிடம் 6 தவணைகளாக ரூ.9.5 லட்சம் பணம் பெற்றுள்ளார். ஆனால் வேலை வாங்கித்தராமலும், பணத்தை திரும்ப தராமலும் அஞ்சுகம் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் எம்.ஜி.ஆர் நகர் காவல் குற்றப்பிரிவு போலீசார் அஞ்சுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.