தமிழ்நாட்டு மாநில விலங்கின் வாழ்விடமாக மாறிய கேரளா

Update: 2025-09-17 03:11 GMT

தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகள், வேறு எங்கும் இல்லாத வகையில், கேரள மாநிலம் இரவிக்குளம் தேசிய பூங்காவில், அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில், யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வந்தாலும் வரையாடுகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடுகள் எண்ணிக்கை, தமிழ்நாட்டில் தற்போது 1,303 ஆக இருக்கும் சூழலில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இரவிக்குளம் தேசிய பூங்காவில் சற்று அதிகமாக 1,365 வரையாடுகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இங்கு 2024ல் 827 ஆக இருந்த வரையாடுகளின் எண்ணிக்கை, இந்த ஆண்டில், 841 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்