ஆசிரியரை பீர் பாட்டிலால் குத்திய இளைஞர் - கர்நாடகாவில் அதிர்ச்சி

Update: 2025-05-16 04:27 GMT

கிரிக்கெட் பந்தை திருப்பி தராத ஆசிரியரை, இளைஞர் ஒருவர் பீர் பாட்டிலால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பாகலகோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆசிரியர் ராமப்பா பூஜாரி. சம்வத்தன்று இவரது வீட்டருகே பவன் ஜாதவ் என்பவர் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பந்து, ராமப்பா பூஜாரி வீட்டிற்குள் சென்றுவிட்டதாக தெரிகிறது. அதனை கேட்கச் சென்ற பவன் ஜாதவுக்கும், ராமப்பா பூஜாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பவன் ஜாதவ் அருகில் உடைந்து கிடந்த காலி பீர் பாட்டிலால் ராமப்பா பூஜாரியை குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்