டூவீலரில் சென்றவருக்கு காத்திருந்த எமன் | வெளியான பதைபதைக்க வைக்கும் காட்சி
மின்சார ஒயர் சிக்கி விபத்து - இருவர் காயம்
கேரளாவில் மின்சார ஒயர் கழுத்தில் சிக்கி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கீழே விழுந்து காயமடைந்தனர்.
கொல்லம் மாவட்டம் மையினாகப்பள்ளி அருகே கல்லூரியில் பயிலும் கௌதம் என்பவர், அவரது சகோதரி ஆஷா உடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் மின்சார ஒயர் அறுந்து தொங்கிய நிலையில், ஆஷாவின் கழுத்தில் சிக்கியுள்ளது. இதனால் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். பின்னர் இருவரும் மருத்துவமனையில் சிசிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.