யமுனை நதி தனது அபாய கட்ட அளவை நெருங்கும் நிலையில், உத்தரப் பிரதேசத்தின் மதுரா நகரம் வெள்ளம் சூழ்ந்து காட்சியளித்தது. அங்குள்ள வீடுகள் மற்றும் கோயில்களுக்குள் வெள்ளநீர் புகுந்தது.
நொய்டாவில் கனமழை மற்றும் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள கால்நடைகள் பத்திரமாக வேறு பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டன.