மராத்தி மொழியில் பேசாத கழிவறை ஊழியருக்கு அடி
மகராஷ்டிரா அருகே பொது கழிவறையில் மராத்தி மொழியில் பேசாத ஊழியரை எம்.என்.எஸ் கட்சி தொண்டர்கள் கன்னத்தில் அறைந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாண்டேடு பகுதியில் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையை உபயோகித்த பெண்ணிடம் பணம் கேட்டபோது அங்கிருந்த உள்ளூர் நபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது.