Women | Saree | fire | ஆசை ஆசையாக வாங்கிய விலையுயர்ந்த புடவையை ஷோரூம் முன்பே தீயிட்டு கொளுத்திய பெண்
Women | Saree | fire | ஆசை ஆசையாக வாங்கிய விலையுயர்ந்த புடவையை ஷோரூம் முன்பே தீயிட்டு கொளுத்திய பெண்
ஷோரூமில் வாங்கிய ஆடையை தீயிட்டு கொளுத்திய பெண்
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் பிரபலமான ஷோரூம் நிறுவனத்தின் முன்பு கடையில் வாங்கிய ஆடையை பெண் ஒருவர் தீயிட்ட கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் ஷோரூம் ஒன்றில் பெண் ஒருவர் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு 6 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புடவையை வாங்கியுள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது அந்த புடவையில் பழுது இருந்ததால், மீண்டும் ஷோருமூக்கு சென்று புடவையை மாற்றி தருமாறு கேட்டுள்ளார். இதற்கு கடைக்காரர்கள் மறுக்கவே ஆத்திரமடைந்த அந்த பெண், கடையில் முன்பு தான் வாங்கிய புடவையை தீயிட்டு கொளுத்தினர்.