தமிழகத்தில் ரயில்வே பணிகள் தாமதம் ஏன்? விளக்கம் கொடுத்த ரயில்வே அமைச்சர்
தமிழகத்தில் ரயில்வே பணிகள் தாமதம் ஏன்? விளக்கம் கொடுத்த ரயில்வே அமைச்சர்
தமிழகத்தில் நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சவால்கள் காரணமாக ரயில்வே பணிகள் தாமதமாக நடைபெறுவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை எம்.பி. தர்மர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற தேவைப்படும் 4 ஆயிரத்து 315 ஹெக்டேர் நிலத்தில், ஆயிரத்து 38 ஹெக்டேர் மட்டுமே, அதாவது 24 சதவீத நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சவால்கள் காரணமாக, ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவது தாமதமாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.