ஏர்டெல் சேவை பாதிப்பு - பயனர்கள் அவதி
இந்தியா முழுவதும் ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டதாக பயனர்கள் புகார் தெரிவித்தனர். அழைப்புகள் மற்றும் இணைய சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, பாதிப்புகள் சரி செய்யப்படும் என ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய குழு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக ஏர்டெல் சேவை முடங்கியதாக கூறப்படும் நிலையில், சமூக வலைதளங்களில் #airtel down என்ற ஹேஷ்டாக்கை பயனர்கள் பதிவிட்டுள்ளனர்.