காரின் காற்றை பிடுங்கிவிட்டு அமைச்சரை சரமாரியாக தாக்கிய மாணவர்கள் - மே.வங்கத்தில் ஷாக்
மேற்கு வங்கத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ப்ரத்யா பாசுவை (Bratya Basu) மாணவர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர் சங்க தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இந்திய மாணவர் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்தினர். அமைச்சரை தாக்கியதோடு, காரில் வெளியேற அவர் முயன்றபோது, டயரில் காற்றையும் திறந்து விட்டு தடுத்தனர். அப்போது சில மாணவர்கள் மீது கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர் அமைப்பினரை கண்டித்து கொல்கத்தாவில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.