ராஜஸ்தானில் தவித்த புதுச்சேரி பெண்கள் வீடியோ - "முதல்வர் ஐயா.. காப்பாத்துங்க"

Update: 2025-05-04 16:46 GMT

Puducherry Womens | ராஜஸ்தானில் தவித்த புதுச்சேரி பெண்கள் வீடியோ - "முதல்வர் ஐயா.. காப்பாத்துங்க"

வாகன பெர்மிட் விவகாரத்தால் ராஜஸ்தானில் சிக்கித்தவித்த புதுச்சேரியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். புதுச்சேரி லாஸ்பேட்டை, கோவிந்தாசலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள்,

காசி யாத்திரை சென்றனர். புதுச்சேரி முதல் டெல்லி வரை அனைத்து மாநிலங்களுக்கும் பெர்மிட் எடுத்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் டோல்பூர் பகுதியில் வாகனச் சாவடியை கடந்தபோது பெர்மிட் இல்லை எனக்கூறி, பேருந்தை பிடித்து வைத்து, அதில் பயணம் செய்தவர்களை ஒரு அலுவலகத்திற்குள் பூட்டி வைத்தனர். இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், ராஜஸ்தான் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்பு கொண்ட நிலையில், சுற்றுலா பயணிகள் அனைவரும் அங்கிருந்து விடுவிக்கப்பட்டனர். இதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் புதுச்சேரி முதல்வருக்கு சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்