இந்தியாவின் 'அக்னி 5' ஏவுகணை சோதனை வெற்றி
அணு ஆயுதங்களை ஏந்தி கொண்டு ஐயாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்று தாக்கும் திறன் கொண்ட 'அக்னி 5' ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக இந்திய ராணுவ அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இருந்து வெற்றிகரமாக இந்த சோதனை நடைபெற்றுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய இந்த ஏவுகணை மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது.