Vice President | C. P. Radhakrishnan | அரசியல் சாசன தினம்.. தமிழில் பேசி அசத்திய துணை ஜனாதிபதி CPR

Update: 2025-11-26 14:27 GMT

டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில், இந்திய அரசியல் சாசன தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழில் உரையை துவங்கி அசத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் முர்மு, 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் ஒருங்கிணைப்புக்கு இருந்த தடை நீக்கப்பட்டதாக குறிப்பிட்டார்...

தொடர்ந்து உரையாற்றிய துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழில் பேச்சைத் துவங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

பாரத அன்னையின் பொற்பாதங்களை முதற்கண் பணிந்து வணங்குகிறேன்

வளர்ந்த பாரதம் எனும் இலக்கை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்..

மேலும், நீதித்துறை மற்றும் நிதித்துறை சீர்திருத்தங்கள் மிக முக்கியமானவை என்று கூறிய அவர், நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் மற்றும் பழங்குடி சமூகங்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்...

Tags:    

மேலும் செய்திகள்