புதுப்பொலிவுடன் வள்ளுவர் கோட்டம் - வியக்க வைக்கும் வசதிகள்.. இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
சென்னையி ல் 80 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின், இன்று மாலை, பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கிறார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியால், கடந்த 1974, 75ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டம், 80 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ் பண்பாட்டு இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் அய்யன் வள்ளுவர் கலையரங்கம், ஓவியங்களுடன் கூடிய குறள் மணி மாடம், திறக்குறள் ஆய்வரங்கம்-ஆராய்ச்சி நூலகம் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. புதுப்பொலிவுடன் காணப்படும் வள்ளுவர் கோட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின், இன்று மாலை திறந்து வைக்கிறார். முதல் நிகழ்வாக, மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்கு நன்றி தெரிவித்து, மாற்றுத் திறனாளிகள் சார்பில், முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.