UttarPradesh Bike Fire Accident | திடீரென தீப்பிடித்து எரிந்த பைக் - ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய இளைஞர்
உத்தரப்பிரதேசத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. குஷி நகர் பகுதியில் இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. இளைஞர் குதித்து உயிர்தப்பிய நிலையில், உள்ளூர் மக்கள் போராடி தீயை அணைத்தனர்.