Dileep | Kerala | பேருந்தில் திலீப் படத்திற்கு பெண் பயணி எதிர்ப்பு.. சண்டையில் இறங்கிய சக பயணிகள்..
கேரளாவில் அரசு பேருந்தில் நடிகர் திலீப் படம் ஒளிபரப்பானதால் பயணிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில், திலீப்பின் பெயர் அடிபட்ட நிலையில் திருவனந்தபுரத்தில் தொட்டில் பாலம் சென்ற அரசு பேருந்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. திலீப் படத்துக்கு லட்சுமி என்ற பயணி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால், டிவி-ஐ நடத்துநர் அணைத்தார். இதற்கு சக பயணிகள் எதிரப்பு தெரிவித்ததால் பேருந்தில் சலசலப்பு ஏற்பட்டது.