UP Police Station | DIG | கல்யாண மண்டபம் போல ஜொலித்த காவல் நிலையம்.. கடுப்பான டிஐஜி..

Update: 2025-11-16 10:46 GMT

உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் டிஐஜியை வரவேற்க காவல் நிலையத்தையே காவலர்கள் திருமண மண்டபம் போல் அலங்கரித்தனர். கூர்ஜா காவல் நிலையத்திற்கு ஆய்வுக்காக டிஐஜி கலாநிதி வருவதை அறிந்த போலீசார், அவரை கவர்வதற்காக காவல் நிலையத்தையே திருமண மண்டபம் போல அலங்கரித்து அழுகுபடுத்தினர். டிஐஜி, இதனை பார்த்து கோபம் அடைந்ததோடு அதிகாரிகளை கடிந்து கொண்டார். இதை தொடர்ந்து தாங்கள் அமைத்திருந்த கூடாரங்கள் மற்றும் அலங்காரங்களை போலீசார் அவசர அவசரமாக அகற்றி அப்புறப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்