TTE Attack Viral Video | தட்டிக்கேட்ட TTR-ஐ சட்டை கிழிய அடித்து முகத்தில் டீயை ஊற்றிய உ.பி. பெண்
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ பகுதியில் ரயிலில் டிக்கெட் பரிசோதகரை கடுமையாக தாக்கியதோடு, அவர் முகத்தில் பெண் பயணி, தேநீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டூன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணி ஒருவர் சாதாரண வகுப்பிற்கான டிக்கெட்டை எடுத்துக் கொண்டு ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்துள்ளார். இதை தட்டிக்கேட்ட டிக்கெட் பரிசோதகருடன் அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவரிக் முகத்தில் சூடான தேநீரையும் அப்பெண் ஊற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட டிக்கெட் பரிசோதகர் ரயில்வே போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.