காட்டு யானை தாக்கி பழங்குடியின பெண் உயிரிழப்பு - கேரளாவில் துயர சம்பவம்
கேரள மாநிலம் இடுக்கி அருகே கிழங்கு மற்றும் பழ வகைகளை சேகரிக்க காட்டிற்கு சென்ற பழங்குடியினப் பெண் காட்டு யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். தொட்டப்புராவில் பழங்குடியினருக்கான மறுவாழ்வு மையத்தில் வசித்து வந்த சீதா தற்காலிக வனக் கண்காணிப்பாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சீதா தனது குடும்பத்தினருடன் காட்டிற்கு கிழங்கு, தேன் உள்ளிட்டவற்றை சேகரிக்க சென்றுள்ளார். அப்போது யானை தாக்கியதில் சீதா பலியான நிலையில் மூவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.