கொதிக்க வைத்த தகவல்... குறுக்கே நின்று ரயில்களை தடுத்து நிறுத்திய மக்கள்... பரபரப்பு காட்சி
கர்நாடகாவில் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பயணிகள், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோலார் மாவட்டம் பங்கார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் பெங்களூருக்கு பயணம் செய்கின்றனர். ரயில்களின் பெட்டிகள் குறைக்கப்பட்டதாகக்கூறி, பங்கார்பேட்டை ரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 45 நிமிடங்கள் வரை ரயிலை தடுத்து நிறுத்தியதால், அவ்வழித்தடத்தில் பயணிக்கும் பிற ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன. ரயில்வே உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.