கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் கடன்களை பேரிடர் மேலாண்மை சட்டத்தில் தள்ளுபடி செய்ய முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. முண்டக்கை சூரல்மலை நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் கடன் தள்ளுபடி தொடர்பாக கேரள உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையில் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ள மத்திய அரசு, நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்றும், இது தொடர்பான பரிந்துரைகளை வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியுள்ளது.