மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே வனத்தின் பேரரசனான யானைக்கூட்டம், வலசை பயணத்தை தொடங்கின. 80க்கும் மேற்பட்ட யானைகள், ஒரு வாழ்விடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகின்றன. வலசை செல்லும் யானைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் டார்ஜிலிங் வனத்துறை 50 முதல் 60 கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகிறது. ரயில் பெட்டி போல் யானைகள் வரிசையாக சென்ற அழகான காட்சி வெளியாகி உள்ளது.