இந்தியாவின் வட மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், விடிய விடிய பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல பகுதிகளில் வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் குளம் போல் தேங்கியுள்ள வெள்ள நீரால், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.