``2வது முறை வரும் மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது’’ - உச்ச நீதிமன்றம் அதிரடி
அரசியல்சாசன சிற்பிகள் கனவு கண்டதை போன்ற இணக்கம் ஆளுநருக்கு, மாநில அரசுக்கு இடையே உள்ளதா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிட கோரிய தமிழக அரசின் ரிட் மனுவுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ம் தேதி தீர்ப்பளித்தது. மசோதாக்கள் மீது ஆளுநர், குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது குறித்த ஆலோசனை கருத்தை பெறும் வகையில் குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பி அனுப்பிருந்தார். தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அரசியல்சாசன அமர்வில் இந்த மனு விசாரணை நடைபெற்றது. அப்போது, அரசியல்சாசன சிற்பிகள் கனவு கண்டதை போன்ற இணக்கம் ஆளுநருக்கு, மாநில அரசுக்கு இடையே உள்ளதா? என கேள்வி எழுப்பினர். 2-ஆவது முறை வரும் மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளது.