செல்பி எடுக்க முயன்றவரை தள்ளிவிட்ட அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன்
டெல்லியில் தன்னிடம் செல்பி எடுக்க முயன்ற நபரை, சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் கோபமாக தள்ளிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகையும், சமாஜ்வாடி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான ஜெயா பச்சன், தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணியாக செல்வதற்காக வந்தார். அப்போது, அவர் அருகில் வந்த ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயா பச்சன், திடீரென ரசிகரை தள்ளிவிட்டு இந்தியில் கோபமாக கேள்வி எழுப்பினார். செல்பி எடுக்க முயன்ற ரசிகரை, ஜெயா பச்சன் தள்ளிவிட்ட காட்சி அதிகம் பகிரப்பட்டு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.