தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது செஸ் வீரர் ஸ்ரீஹரி சர்வதேச கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை எட்டியுள்ளார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான எலோ ரேட்டிங் (Elo rating) மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 500 புள்ளிகளை ஸ்ரீஹரி கடந்துள்ளார். இதன்மூலம், இந்தியாவின் 86வது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் ஸ்ரீஹரி பெற்றுள்ளார். தொடர் முயற்சிகளுக்குப் பிறகு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று இருப்பதாகவும், கிராண்ட் மாஸ்டர் ஆனது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஸ்ரீஹரி தெரிவித்துள்ளார்.