மணிப்பூரில் மெய்தி-குக்கி இன மக்களிடையே தகராறு- போலீஸ் குவிப்பு
மணிப்பூர் மாநிலம், கிழக்கு இம்பால் மாவட்டத்தில் குக்கி மற்றும் மெய்தி பழங்குடியின மக்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால், போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். மெய்தி இன விவசாயி ஒருவர், தனது வயலில் உழவுப் பணியை மேற்கொள்ளச் சென்றார். அவரை குக்கி இன மக்கள் தடுத்து நிறுத்தி, அந்த நிலம், மெய்தி இன விவசாயிக்குச் சொந்தமானதல்ல என்று கூறி, தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, எல்லை பாதுகாப்பு படை, சிஆர்பிஎப், இம்பால் போலீசார் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும், மீண்டும் அங்கு மோதல் ஏற்படாத வகையில், கிழக்கு இம்பால் மாவட்டத்தில் போலீசார் முகாமிட்டுள்ளனர்.