தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில், நீர்பாசனத்திற்காக தோண்டப்பட்ட சுரங்கத்திற்குள் 8 பேர் சிக்கிய நிலையில், மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திடீரென்று சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டு இரண்டு பொறியாளர்கள் உட்பட எட்டு பேர் சிக்கினர். இதையடுத்து தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சுமார் 300 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.