ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்தது உச்ச நீதிமன்றம்

Update: 2025-04-12 04:59 GMT

ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் முதன்முறையாக காலக்கெடு விதித்துள்ளது.

மசோதாக்கள், துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக் கோரும் தமிழ்நாடு அரசின் ரிட் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த 8-ஆம் தேதி தீர்ப்பு கூறியது.

அத்தீர்ப்பின் விவரம் தற்போது வெளியாகி உள்ளது அதில், ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.

ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்காதபட்சத்தில் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்