Karnataka Protest | திடீரென வெடித்த போராட்டம் - கல்வீச்சு,வன்முறை.. உச்சகட்ட பரபரப்பில் கர்நாடகா
கர்நாடகாவின் பெலகாவி (Belagavi) பகுதியில், கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி கரும்பு விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம், வன்முறையாக மாறியது. 9வது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில், நெடுஞ்சாலையை மறித்து போராட முயன்ற விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும், விவசாயிகள் சிலர் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில், போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால், பெங்களூரு - புனே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கல்வீச்சில் பலரது வாகனங்களும் சேதமடைந்தன. இதன் காரணமாக அங்கும் பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. உடனே அமைதியான முறையில் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.