``GST-யில் வரும் திடீர் மாற்றம்.. தமிழகத்திற்கு பாதிப்பு’’மத்திய அரசுக்கு சொல்லப்பட்ட யோசனை
GST விகிதக் குறைப்பு மற்றும் இழப்பீட்டு மேல்வரி இரண்டும் ஒரே நேரத்தில் நீக்குவது மாநில வருவாயை பெரிதும் பாதிக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
டெல்லியில் நடந்த GST இழப்பீட்டு மேல்வரியினை மறுஉருவாக்கம் செய்வதற்கான கூட்டத்தில் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார்.
GST விகிதக் குறைப்பு மற்றும் இழப்பீட்டு மேல்வரி இரண்டும் ஒரே நேரத்தில் நீக்கப்பட்டால், மாநில வருவாய் பாதிக்கப்படும் என்பதால், இழப்பீட்டு மேல்வரியை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
GST விகித சீரமைப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், மாநிலங்களின் நிதி தேவைகள் கணக்கில் எடுக்கப்பட வேண்டும் என்றார்.
மேல்வரி தொடர இயலாத நிலையால், மாநில வருவாய் இழப்பை ஈடுசெய்ய மாற்று வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.
உடனடி தீர்வாக, மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பு 4 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும், எந்த நிபந்தனையும் இன்றி அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கல்வி, சுகாதாரத்தில் முதலீடு செய்து வருவதால், வரிசீரமைப்பு சமூக நலத் திட்டச் செலவுகளை குறைக்கும் வகையில் இருக்கக்கூடாது என அவர் தெரிவித்தார்.