சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் பகுதியில், அரசு பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு 11 மற்றும் 19 ஆகிய எண்களை கூட ஆங்கிலத்தில் எழுத தெரியாதது பேசு பொருளாகியுள்ளது. அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் அவரிடம் 11 மற்றும் 19 ஆகிய எண்களை ஆங்கிலத்தில் எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போது அவர் அதனை எழுத்து பிழையுடன் எழுதியது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் இதுபோன்ற ஆசிரியர்கள் எப்படி மாணவர்களுக்கு நல்ல கல்வியை போதிப்பார்கள் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.