Special Report | ஆந்திராவுக்கு அடித்த மெகா ஜாக்பாட் - இந்தியாவில் நேரடியாக இறங்கும் கூகுள்
ஆந்திராவுக்கு அடித்த மெகா ஜாக்பாட் - இந்தியாவில் நேரடியாக இறங்கும் கூகுள்
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரி விதிப்பால் அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே
வர்த்தகப் போர் நடந்து கொண்டிருக்க கூடிய சூழல்ல உலகளாவிய ஜெயண்ட்-ஆன கூகுள் நிறுவனம் தன்னுடைய பிரமாண்டமான நிறுவனத்தை இந்தியாவில், அதுவும் நம் அண்டை மாநிலமான ஆந்திராவில் அமைக்க இருக்கும் செய்தி மகிழ்ச்சிய ஏற்படுத்தி இருக்கு.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முதலீடு இது.
டிஜிட்டல் யுகத்துல செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம்தான் உலகையே ஆட்டிப் படைக்குது.
எந்த துறையா இருந்தாலும் எல்லா துறையிலும் இது தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. அதுக்கேத்த மாதிரி உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது என்பது பல நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய சவாலா இருக்கு. இதுல உலகின் முன்னனி டெக் ஜாம்பவனான கூகுளும் தன்னுடைய செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகளை மேம்படுத்தவும், மக்களிடையே பரவலாக சந்தைப்படுத்தவும், அதிக கவனம் செலுத்திக்கிட்டிருக்கு.
இந்த வரிசைல தான், கூகுள் நிறுவனம் நமது அண்டை மானிலமான ஆந்திராவுல மிகப்பெரிய ஒரு செயற்கை நுன்ண்றிவு தரவுமைய வளாகத்தை அமைக்கப்போகுது. இதுக்கான ஒப்பந்தம் செவ்வாய்கிழமை கையெழுத்தாகி இருக்கு. அமெரிக்காவுக்கு வெளியே கூகுள் நிறுவனம் அமைக்கும் மிகப் பெரிய நிறுவனம் இது என்பதுதான் இதுல இருக்ககூடிய தனித்துவம்.