திருப்பரங்குன்றம் மலை மீது நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து 300அடி உயர திருப்பரங்குன்றம் மலை மீது ஏறிச் சென்று அங்குள்ள நெல்லித்தோப்பு பகுதியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்