நடுரோட்டில் மறித்து காரை தட்டி ஹீரோயிசம் காட்டிய மத்திய அமைச்சர் மகன்

Update: 2025-08-23 04:06 GMT

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 'பார்க்கிங்' பிரச்சினையால் நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் சுரேஷ் கோபியின் மகனும், நடிகருமான மாதவ்சுரேஷின் வீடியோ வெளியாகி உள்ளது. சாஸ்தமங்கலம் சாலையில் வாகனத்தை நிறுத்துவது தொடர்பாக சுரேஷ்கோபி மகன் மாதவ்சுரேஷ் மற்றும் காங்கிரஸ் வழக்கறிஞரான வினோத் கிருஷ்ணன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வழக்கறிஞரின் காரை வழிமறித்த நடிகர் மாதவ்சுரேஷ் சினிமா பாணியில் காரைத்தட்டி மிரட்டி உள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரிடமும் விசாரித்து சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்