விமானத்தில் கிளம்பிய புகை... அவசரஅவசரமாக தரையிறங்கிய சவூதி ஏர்லைன்ஸ் - உ.பி.ல் பரபரப்பு

Update: 2025-06-16 15:10 GMT

உத்தரப்பிரதேசத்தில், சவூதி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது சக்கரத்தில் புகை வந்ததால் பரபரப்பு நிலவியது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்தில், விமானம் தரையிறங்கும்போது சக்கரத்தில் உராய்வு ஏற்பட்டு புகை வெளிவந்தது.

விமானத்தில் சுமார் 250 பயணிகள் இருந்தனர். இதுகுறித்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டு தீயணைப்புத் துறையினர் விரைந்தனர். பின்னர் புகை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்