சைஃப் அலிகான் முதுகில் 2.5 Inch கத்தி... போலீசார் கொடுத்த முக்கிய தகவல்

Update: 2025-01-17 15:44 GMT

நடிகர் சைஃப் அலிகான் தாக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று, மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை அதிகாலை பிரபல நடிகர் சைஃப் அலிகான் வீட்டிற்குள் புகுந்த திருடன், அவரது மகன்களின் அறைக்குள் செல்ல முயன்றுள்ளார். அவரை வீட்டில் பணிபுரிந்தவர்கள் தடுக்க முயன்றனர். அப்போது மகன்களை காப்பாற்ற முயற்சி செய்ய சைஃப் அலிகானை, அந்த திருடன் 6 முறை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சைஃப் அலிகானின் முதுகில் இருந்து 2.5 Inch கத்தியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அந்த கத்தி பாகத்தின் புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மும்பை போலீசார் சைஃபை தாக்கிய விவகாரம் தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்