பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் -காவல்துறை அறிவிப்பு

Update: 2025-04-24 02:44 GMT

ஜம்மு கஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் குறித்து தகவல் தருபவருக்கு 20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனந்த்னாக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் விவரங்களை அளிக்க தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது. பயங்கரவாதிகள் பற்றி கூறுவோரின் விவரங்கள், ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்