"ஆசிரியர்கள் தங்கள் கற்பிக்கும் திறனை மேம்படுத்த வேண்டும்" - புதுவை CM ரங்கசாமி வேண்டுகோள்
ஆசிரியர்கள் தங்கள் கற்பிக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ள முதலமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித் துறையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு நியமன ஆணை மற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் தங்கள் கற்பிக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.