கேரளாவில், கைதி போலீசாரை தாக்கிய வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அபுதாஜர். கஞ்சா போதையில் இருந்த இவரை போலீசார் கைது செய்த நிலையில், அபுதாஜர் போலீசை தாக்க துவங்கினார். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொது மக்கள் ஆத்திரத்தில் கைதியை சரமாரியாக தாக்கினர். தற்போது இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.