கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது தொடர்பாக வெளியாகியுள்ள புதிய தகவல்கள் திமுகவின் இரட்டை நிலைப்பாட்டு முகத்திரையை கிழித்திருப்பதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
கச்சத்தீவு விவகாரத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெற்ற தகவலை சுட்டிக்காட்டி மீண்டும் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தமிழகத்தின் நலன்களை காக்க திமுக ஒன்றுமே செய்யவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். திமுகவும் காங்கிரசும் குடும்பம் சார்ந்த கட்சிகள் என குற்றம்சாட்டி உள்ள பிரதமர், தங்களின் சொந்த மகன் மற்றும் மகள்களின் வளர்ச்சியையே அவர்கள் பார்ப்பதாக விமர்சித்துள்ளார். கட்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக காட்டிய அலட்சியமும், இரக்கமற்றத்தனமும் ஏழை மீனவர்கள் மற்றும் மீனவ பெண்களுக்கு தீங்கிழைத்து இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.