பஞ்சாப்பில், இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இளைஞர் உயிரிழந்தார்.
வெளிநாடு வாழ் இந்தியரான ஹர்பிரீத் சிங் என்பவர், சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான ஃபசில்காவுக்கு வந்துள்ளார். வீட்டில் உள்ள உறவினர்களிடம் சோபாவில் அமர்ந்தபடி பேசிவிட்டு எழுந்தபோது, இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்து வயிற்றில் குண்டு பாய்ந்தது.
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஹர்பிரீத் சிங் உயிரிழந்தார்.
அவருக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.