பாகிஸ்தானுடன் அமைதியை நிலைநாட்ட தான் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசு உதவியுடன் நடத்தப்படும் பயங்கரவாதம் என்ற பாதையை பாகிஸ்தான் கைவிட்டு, சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார். தொடர்ந்து சீனாவுடனான உறவு குறித்து பேசிய அவர், அண்மையில் சீன அதிபரை தான் சந்தித்த பிறகு எல்லைப் பகுதியில் அமைதி திரும்ப தொடங்கியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், தானும் மனிதன்தான் என கூறிய பிரதமர், சில நேரங்களில் தான் தவறிழைக்கலாம், ஆனால் அவை தவறான உள்நோக்கம் கொண்டதில்லை என விளக்கமளித்தார்.