Planecrash || TATA GROUPS || உலகை உலுக்கிய விமான விபத்து.. ஏர் இந்தியா CEO வெளியிட்ட வீடியோ..

Update: 2025-06-13 02:23 GMT

உலகை உலுக்கிய விமான விபத்து.. ஏர் இந்தியா CEO வெளியிட்ட வீடியோ.. டாடா குரூப் முக்கிய அறிவிப்பு

அகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளான நாள், ஏர் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த எங்கள் அனைவருக்கும் ஒரு கடினமான நாள் என்று அந்த குழுமத்தின் சிஇஓ கேம்ப் பெல் வில்சன் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குப் பிறகு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிக்க அரசு அதிகாரிகளுடன் ஏர் இந்தியா குழு இணைந்து செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பராமரிப்பாளர்களை கொண்ட ஒரு சிறப்புக் குழு அகமதாபாத் விரைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்