Air India Flight Crash | Kerala | விமான விபத்து - அடையாளம் காணப்பட்ட கேரள செவிலியர் உடல்

Update: 2025-06-24 06:55 GMT

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த கேரளா செவிலியர் ரஞ்சிதா நாயரின் உடல், டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. லண்டனில் செவிலியராகப் பணியாற்றி வந்த ரஞ்சிதா நாயருக்கு கேரளாவில் அரசு செவிலியர் பணி கிடைத்துள்ளது. இதையடுத்து, லண்டனில் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்வதற்காக, அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்றபோது, விமான விபத்தில் அவர் உயிரிழந்தார். அவருடைய உடல், அவருடைய சகோதரர் மற்றும் தாயாரின் டிஎன்ஏ மாதிரி மூலம் அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து, ரஞ்சிதா நாயரின் உடல் இரு தினங்களில் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்